நியூசிக்கு எதிரான முதல் டி20 இலங்கை மகளிர் இமாலய வெற்றி

கிறிஸ்ட்சர்ச்: நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான டி20 போட்டியில் நேற்று இலங்கை 7 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. நியூசிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள இலங்கை மகளிர் அணி, கிறிஸ்ட்சர்ச்சில் நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் நியூசியுடன் மோதியது. டாஸ் வென்று களமிறங்கிய நியூசி பெண்கள் அணி 18.5 ஓவரில் 101 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக எம்மா மெக்லீட் 44 ரன் விளாசினார்.

இலங்கை வீராங்கனைகளில் மலிகா மதரா 3, இனோஷி, கவிஷா தலா 2 விக்கெட் கைப்பற்றினர். தொடர்ந்து 102 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை 14.1 ஓவரிலேயே 3 விக்கெட் இழப்புக்கு இலக்கை தொட்டது. அதனால் இலங்கை 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கை கேப்டன் சமரி அத்தபட்டு 64, நீலக்‌ஷிகா சில்வா 12 ரன்னுடன் கடைசி வரை களத்தில் நின்றனர்.

The post நியூசிக்கு எதிரான முதல் டி20 இலங்கை மகளிர் இமாலய வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: