திருத்தணி: திருத்தணி அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் இருந்த குளிர்சாதன பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வார்டில் ஏற்பட்ட புகைமூட்டத்தால் அங்கிருந்த நோயாளிகள், பொதுமக்கள் வெளியேற்றம் செய்யப்பட்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.