ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம்; தொழில்துறைக்கு ரூ.3,915 கோடி ஒதுக்கீடு

ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு விமான நிலையங்களின் பங்கு குறிப்பிடத்தக்கது என்பதை நன்கு உணர்ந்த இந்த அரசு சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் தூத்துக்குடி விமான நிலையங்களின் விரிவாக்கத்திற்கு உரிய நிலங்களைக் கையகப்படுத்தி 2,938 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை இந்திய விமான நினைய ஆணையத்திற்கு வழங்கியுள்ளது. இந்நிலையில் தென் தமிழ்நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கவும் மாநிலத்தின் பொருளாதார மளர்ச்சி குன்றிய பகுதிகளின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்காகவும், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் புதிய விமான நிலையம் ஒன்று அமைக்கப்படும்.

தமிழ்நாட்டை உலகளாவிய கப்பல் கட்டும் மையமாக நிறுவிட ‘தமிழ்நாடு கடல் போக்குவரத்து உற்பத்திக் கொள்கை 2025 ஒன்றை அரசு அறிமுகப்படுத்தும். கப்பல் மற்றும் படகு வடிவமைப்பு மற்றும் கப்பல் சட்டகம் கட்டுருவாக்கம் மற்றும் கப்பல் இயந்திர உற்பத்தி ஆகிய துறைகளில் முதலிடு மற்றும் புத்தாக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கங்களைக் கொண்டு இப்புதிய கொள்கை அமைந்திடும் இந்தத் தொழிலின் வருகையின் மூலம் கடலூர் மற்றும் தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் 30000 வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் மேலும் குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை வளர்ச்சிக்கும் இக்கொள்கை வித்திடும்.

உயிரி தொழில்நுட்பத் துறையில் முன்னணி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் அமைந்துள்ளன. உயிரி தொழில்நுட்ப சூழலமைப்பை ஊக்குவிப்பதற்காகவும் உயிரியல் மருந்து மற்றும் நோய் தீர்வியல் போன்ற வளர்ந்து வரும் துறைகளில் தமிழ்நாட்டை முன்னிலைப்படுத்தவும். அதிநவீன உயிர் அறிவியல் பூங்கா ஒன்று சென்னைக்கு அருகில் உருவாக்கப்படும். இதில் உலகத்தரம் வாய்ந்த தரமான உட்கட்டமைப்பு வசதிகள் பொது சோதனை மையங்கள் ஆய்வகங்கள் மற்றும் இத்துறையின் உயர் மதிப்புக்கூட்டல் பொருட்களை உற்பத்தி செய்திடத் தேவையான பிற முக்கிய தொழில்நுட்ப வசதிகளுடன் ஆயத்த உற்பத்திக் கூடங்கள் ஆகியவை அமைக்கப்படும். இந்த வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறைக்கு ரூ.3,915 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

The post ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம்; தொழில்துறைக்கு ரூ.3,915 கோடி ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Related Stories: