சென்னை: விளிம்பு நிலை மக்களின் நலன்களை கொண்டு உருவாக்கப்பட்ட பட்ஜெட் என விசிக எம்.எல்.ஏ. சிந்தனைச்செல்வன் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு நிதியை வழங்க மறுத்த நிலையிலும் சிறப்பான பட்ஜெட்டை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ளது. கைவிடப்பட்ட முதியவர்களை பாதுகாக்கும் அன்புச் சோலை திட்டம் வரவேற்கத்தக்கது என சிந்தனைச்செல்வன் தெரிவித்துள்ளார்.