ஆட்டோக்களில் ஓரிரு மாதங்களில் ஆப் மூலம் கட்டணம் வசூல் செய்யும் முறை அமல்

*போக்குவரத்து ஆணையர் தகவல்

புதுச்சேரி : ஆட்டோக்களில் ஓரிரு மாதங்களில் ஆப் மூலம் பயணிகளிடம் கட்டணம் வசூல் செய்யும் முறை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுநர் சங்க பிரதிநிதிகள் முக்கிய கோரிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தலைமை தாங்கினார். இதில் ஆட்டோ ஓட்டுநர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும். ஆட்டோ மீட்டருக்கு பதில் ஆப் மூலமாக கட்டணம் வசூலிக்க அனுமதிக்க வேண்டும். அனுமதி இல்லாமல் இயங்கும் இருசக்கர வாடகை வண்டிகளை அனுமதிக்க கூடாது என ஆட்சியரிடம் கோரிக்ைக விடுத்தனர்.

போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் முன்னிலை வகித்து பேசியதாவது: அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தான் இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. காவல்துறை மற்றும் போக்குவரத்து துறை இணைந்து அனுமதி இல்லாமல் இயங்கும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். இன்னும் ஓரிரு மாதத்தில் ஆப் மூலமாக பயணிகளிடம் கட்டணம் வசூல் செய்யும் முறையை அந்த ஆப்பை உருவாக்கி அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.

நிறைவாக ஆட்சியர் குலோத்துங்கன் பேசுகையில், போக்குவரத்து துறை செயலரிடமும், முதல்வரிடமும் கலந்து ஆலோசனை செய்து தங்கள் கோரிக்கைகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். என்றார். இக்கூட்டத்தில் சீனியர் எஸ்.பி. கலைவாணன், போக்குவரத்து துறை ஆணையர் சிவக்குமார், போக்குவரத்து சீனியர் எஸ்.பி. பிரவீன்குமார் திரிபாதி மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், ஆட்டோ சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

The post ஆட்டோக்களில் ஓரிரு மாதங்களில் ஆப் மூலம் கட்டணம் வசூல் செய்யும் முறை அமல் appeared first on Dinakaran.

Related Stories: