சூதாடிய 8 பேர் கைது

கோவை,டிச.30: கோவை ரத்தினபுரி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியார் வீதியில் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், ரத்தினபுரி போலீஸ் எஸ்ஐ கார்த்திகேய பாண்டியன் தலைமையில் போலீசார் அங்கு திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட ரத்தினபுரியை சேர்ந்த செந்தில்குமார்(55),ராஜேந்திரன் (56), மருதாசலம்(60),ராபர்ட் ராஜ்குமார் (49),பிரகாஷ் (55),ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சூதாட்ட சீட்டுகள் 104 மற்றும் ரூ.540 பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல ரேஸ்கோர்ஸ் போலீசார் பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட சிவகங்கையை சேர்ந்த செந்தில்குமார் (36), ராஜ்குமார் (49),புலியகுளத்தை சேர்ந்த பூமிநாதன் (45) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: