உறை பனியால் ஐஸ் கட்டிகளாக மாறிய செடி, கொடிகள்

மஞ்சூர், டிச.27: கோரகுந்தா பகுதியில் கொட்டிய உறை பனியில் செடி, கொடிகள் ஐஸ் கட்டிகளாக மாறியது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக உறை பனி கொட்டி வருகிறது. குறிப்பாக ஊட்டி, தலைகுந்தா, கோரகுந்தா, அப்பர்பவானி, அவலாஞ்சி பகுதிகளில் வரலாறு காணாத வகையில் உறை பனியின் தாக்கம் உள்ளது. மஞ்சூர் அருகே உள்ள கோரகுந்தா மற்றும் அவலாஞ்சி பகுதிகளில் நேற்றும் கடுமையான உறை பனி கொட்டியது. காலை ேநரத்தில் புல் வெளிகள் அனைத்தும் ஐஸ் துகள்களாக காணப்பட்டது.

செடி, கொடிகளில் பனி உறைந்து ஐஸ் கட்டிகளாக மாறி காட்சியளித்தது. மேலும் குந்தா பகுதியில் பனியின் காரணமாக தேயிலை தோட்டங்களில் செடிகள் கருக துவங்கியுள்ளது. கடந்த சில தினங்களாகவே தேயிலை மகசூல் குறைந்து தொழிற்சாலைகளுக்கு பசுந்தயிலை வரத்து பெருமளவு குறைந்து போயுள்ளது. தற்போது, உறை பனி கொட்டுவதால் வரும் நாட்களில் தேயிலை மகசூல் மேலும் குறைய வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

 

Related Stories: