பாலக்காடு, டிச. 23: பாலக்காடு மாவட்டம், தத்தமங்கலம் அருகே பள்ளத்தாம்புள்ளியில் மொபட்டும், பைக்கும் நேருக்குநேர் மோதியதில் 5 பேர் காயமடைந்தனர். பாலக்காடு மாவட்டம், கொடுவாயூர் மீனாட்சிபுரம் சாலையில் தத்தமங்கலம் அருகே கடந்த 19ம் தேதி இரவு சுரஜ் (25), ஜெயன் (27), ஆகியோர் பெயிண்டிங் வேலை முடித்து வீட்டிற்கு பைக்கில் வந்தனர். அப்போது எதிரே தேவி என்பவர் ஓட்டி வந்த மொபட்டும், பைக்கும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளனது. இதில் பைக்கில் வந்த இரண்டு பேரும், மொபட்டில் வந்த 3 பேரும் சாலையில் விழுந்தனர். இதில், 5 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
அருகில் இருந்தவர்கள் காயமடைந்த 5 பேரை மீட்டு சித்தூர் தாலுகா அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சுரஜ், ஜெயன் ஆகியோர் அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து புதுநகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
