சித்தூர் ஆரியம்பள்ளம் ஐயப்பன் கோயிலில் மண்டல விளக்கு திருவிழா

பாலக்காடு, டிச. 23: பாலக்காடு மாவட்டம், சித்தூர் ஆரியம்பள்ளம் ஐயப்பன் கோயிலில் மண்டல விளக்கு திருவிழா வரும் 25ம் தேதி நடைபெறுகிறது. 25ம் தேதி காலை 5 மணிக்கு கணபதிஹோமம், மூலவருக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு விளக்கு பூஜை நடைபெறுகிறது. மதியம் 12 மணிக்கு உச்சிகாலபூஜை, தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு அலங்கார யானை மீது உற்சவர் செண்டை வாத்யத்துடன், பாலக்கொம்பு எழுந்தருளல் திருவீதியுலா நடக்கிறது. இதனைத்தொடர்ந்து தீபாராதனை விளக்கு பூஜைகள் நடைபெறுகின்றன. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

Related Stories: