அரியலூர் பகுதியில் அனுமதியின்றி மது விற்ற முதியவர் கைது‌

 

தா.பழூர், மார்ச் 13: அரியலூர் பகுதியில் அனுமதியின்றி அரசு மது பாட்டில்கள் விற்ற முதியவரை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலான காவல்துறையினர் கோவிந்தபுத்தூர் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த பகுதியில் அனுமதி மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் படி ஆய்வு மேற்கொண்டனர்‌.

தகவலின் அடிப்படையில் அந்த பகுதிக்கு சென்ற போலீசார் கோவிந்தபுத்தூர் மேலத்தெருவை சேர்ந்த சாமிநாதன் ( 75 ) என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். அவரது வீட்டின் பின்புறம் விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்து சாமிநாதனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அரியலூர் பகுதியில் அனுமதியின்றி மது விற்ற முதியவர் கைது‌ appeared first on Dinakaran.

Related Stories: