நிறைய பெற்றுக் கொள்ள வேண்டாம். ஒன்றிய அரசு ஜனத்தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்று குடும்ப கட்டுப்பாட்டை வலியுறுத்தியது. அதை வெற்றிகரமாக செய்து கொடுத்தது தமிழ்நாடு அரசு. அதனால் நாம் தண்டிக்கப்படுகிறோம். இதற்காக தான் தொகுதி மறுசீரமைப்பு கொண்டு வந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7 கோடி பேர். ஆனால், குடும்ப கட்டுப்பாட்டை மக்களிடம் சரியான விழிப்புணர்வை ஏற்படுத்தாத மாநிலங்கள் இதனால் பயனடையப் போகிறார்கள். வட மாநிலங்கள் இதனால் 100 தொகுதிகள் வரை பெறப்போகிறார்கள்.
உங்களுக்கு பிறக்கக்கூடிய குழந்தை ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அழகான ஒரு தமிழ்ப்பெயரைச் சூட்டுங்கள். இவ்வாறு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். இந்த நிகழ்ச்சியில் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு, சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருமான மா.சுப்ரமணியன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, இ.பரந்தாமன், வெற்றி அழகன், ஜோசப் சாமுவேல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ரவிச்சந்திரன், செய்தி தொடர்புக் குழு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா மற்றும் கழக நிர்வாகிகள், மணமக்களின் பெற்றோர் கலந்து கொண்டனர்.
The post தமிழ்நாட்டில் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதால் தண்டிக்கப்படுகிறோம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.
