சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க நாளை, நாளை மறுநாள் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் 75 ஆயிரம் வாக்குச்சாவடிகளிலும் நாளை, நாளை மறுநாள் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 7,37,807 பேர் விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளனர்.
