பெரணமல்லூர் அருகே இரு தரப்பினரிடையே முன் விரோத தாக்குதல் 6 பேர் மீது வழக்கு

பெரணமல்லூர், மார்ச் 13: பெரணமல்லூர் அடுத்த மேல் சாத்தமங்கலம்பகுதி சேர்ந்தவர்கள் வெங்கடேசன்(32), ஏழுமலை(44)இவர்களின் நிலம் அருகருகே உள்ளது. மேலும் நிலம் சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெங்கடேசன் தனது நிலத்தில் விளைந்த பயிர்களை அறுவடை செய்ய அறுவடை இயந்திரத்தை ஏழுமலை நிலத்தின் வழியே எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.  அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் ஏழுமலை அவரதுதந்தை பெருமாள் மற்றும் தாயார் பாஞ்சாலை ஆகியோர் வெங்கடேசன் வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் எடுத்து வந்த கட்டையால் வெங்கடேசன் அவரதுதந்தை காசி மற்றும் தாயார் எல்லம்மாள் ஆகியோரை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் வெங்கடேசன் தரப்பினர் வீட்டில் இருந்து அருவாமனை எடுத்து வந்து எதிர் தரப்பினரை வெட்டி தாக்குதலில் ஈடுபட்டதால் இரு தரப்பினருக்கும்ஏற்பட்ட காயத்தால் ஆரணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து பெரணமல்லூர் போலீசாரிடம் இரு தரப்பினரும் தனித்தனியாக கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post பெரணமல்லூர் அருகே இரு தரப்பினரிடையே முன் விரோத தாக்குதல் 6 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: