டெல்லி ராஷ்ட்ரிய ஸ்மிருதி ஸ்தலத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகனுக்கு நினைவிடம்

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி 92 வயதில் காலமானார். டெல்லியில் முன்னாள் பிரதமர்கள், குடியரசு தலைவர்களின் நினைவிடங்கள் உள்ள ராஷ்ட்ரிய ஸ்மிருதி ஸ்தலத்தில் மன்மோகன் சிங்குக்கு நினைவிடம் அமைக்க இடம் தர ஒன்றிய அரசு முன்வந்தது. இங்கு மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் நினைவிடம் அருகில் மன்மோகன் சிங் நினைவிடத்திற்கு இடம் தரப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையில் அடுத்த கட்டமாக மன்மோகன் சிங் நினைவாக அமைக்கப்படும் அறக்கட்டளையின் பெயரில் இடம் மாற்றப்படும். அறக்கட்டளையின் உறுப்பினர்களின் பெயர்களை மன்மோகன் சிங் குடும்பத்தினர் முன்மொழிந்து இறுதி செய்ய வேண்டும். இந்நிலையில் ராஷ்ட்ரிய ஸ்மிருதி ஸ்தலத்தில் முன்மொழியப்பட்ட இடத்திற்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் குடும்பத்தினர் ஒப்புதல் அளித்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post டெல்லி ராஷ்ட்ரிய ஸ்மிருதி ஸ்தலத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகனுக்கு நினைவிடம் appeared first on Dinakaran.

Related Stories: