திருவனந்தபுரம்: கேரளாவில் ஓணம், சித்திரை விஷு, புத்தாண்டு உள்பட பண்டிகை காலங்களில் மது விற்பனை அதிகளவில் நடைபெறும். இந்த நிலையில் இவ்வருட புத்தாண்டை முன்னிட்டு கடந்த டிசம்பர் 31ம் தேதி ஒரே நாளில் கேரளா முழுவதும் ரூ.125.64 கோடிக்கு மது வகைகள் விற்பனையானது. கடந்த 2024 டிசம்பர் 31ம் தேதி ரூ.108.71 கோடி மது வகைகள் விற்பனை செய்யப்பட்டது. கடந்த முறையை விட இம்முறை ரூ.16.93 கோடிக்கு கூடுதலாக விற்பனை நடந்துள்ளது.
கொச்சி கடவந்திரா பகுதியில் உள்ள கடையில் தான் டிசம்பர் 31ம் தேதி மிகவும் அதிகமாக ரூ.1.17 கோடிக்கு மது வகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிதியாண்டில் (2025-26) இதுவரை ரூ.15,717.88 கோடிக்கு மது வகைகள் விற்பனையாகியுள்ளது. கடந்த நிதியாண்டில் டிசம்பர் 31ம் தேதி வரை ரூ.14,765.09 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
