தேங்காய்ப்பால் இனிப்பு போண்டா

தேவையானவை:

*தேங்காய் – ½ மூடி
*பச்சரிசி – 50 கிராம்
*வெள்ளை உளுந்து – 250 கிராம்
*சர்க்கரை – 200 கிராம்
*ஏலக்காய் – 5
*எண்ணெய்
*உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

தேங்காயை துருவி பால் எடுக்கவும். கிரைண்டரில் ஊறவைத்த அரிசி, உளுந்து, உப்பு போட்டு அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சிம்மில் வைத்து, மாவை சிறு சிறு போண்டாவாக போட்டு பொன்னிறமாக வந்ததும் எடுக்கவும். தேங்காய்ப்பாலில் சர்க்கரை, ஏலக்காய் தட்டி போட்டு பரிமாறும் போது போண்டாவை போட்டு சாப்பிட சுவையான இனிப்பு போண்டா ரெடி. மாலை நேரத்தில் சாப்பிட ஏற்றது.

Related Stories: