தேவையானவை:
பீன்ஸ் – 10
கேரட் – 1
உருளைக்கிழங்கு – 1
ஆப்பிள் – 1
தயிர் – 1 கப்
மிளகுத் தூள் – ½ டீஸ்பூன்
கடுகு பேஸ்ட் (அ) கடுகுப் பொடி – 1 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை:
தயிரை வெள்ளை துணியில் கட்டி 2 (அ) 3 மணி நேரம் தொங்கவிட்டு தண்ணீரை வடிய விடவும். பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு ஆகியவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கி வேகவைத்து நன்றாக ஆறவிடவும். பிறகு பொடியாக நறுக்கிய ஆப்பிள், வடிகட்டிய தயிர், உப்பு, மிளகு தூள், கடுகு பொடி (அ) பேஸ்ட் ஆகியவற்றை ஆறவைத்த காய்கறிகளுடன் ஒரு பவுலில் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
