வேலென்டைன்ஸ் ஸ்பெஷல்: ரோஸ் ஸ்ட்ராபெர்ரி டெசர்ட்

தேவையான பொருட்கள்:

ஸ்ட்ராபெர்ரி ½ கப் (நன்றாக அரைத்தது)
சியா விதைகள் 1 மேசைக்கரண்டி
பாதாம் பால் 1 கப்
பேரிச்சை சிரப் 1 சிறு கரண்டி (விருப்பம்)
ரோஸ் எசென்ஸ் 1 துளி (அல்லது
ரோஸ் வாட்டர்)
நாட்டுச் சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:

சியா விதைகளை பாதம் பாலில் சேர்த்து 30 நிமிடம் ஊறவிடவும். ஒரு கண்ணாடி கப்பில் முதலில் அரைத்த ஸ்ட்ராபெர்ரியை ஊற்றவும். அதன் மேல் ஊறிய சியா பால் கலவையை சேர்க்கவும்.

கடைசியாக ரோஸ் எசென்ஸ் சேர்த்து குளிர்சாதன பெட்டியில் 1 மணி நேரம் வைக்கவும். குளிர்ச்சியாக பரிமாறவும். ரோஸ் ஸ்ட்ராபெர்ரி டெசர்ட் தயார்.

மருத்துவ பயன்கள்
சியா விதைகள்

நார்ச்சத்து அதிகம் – ஜீரணம் சீராகும்.
உடல் எடை கட்டுப்பாட்டிற்கு உதவும்.
இதய ஆரோக்கியம் மேம்படும்.

ஸ்ட்ராபெர்ரி

வைட்டமின் C நிறைந்தது.
சருமம் பளபளப்பாகும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

பாதாம் பால்

கால்சியம் அதிகம் – எலும்புகள் வலுவாகும்
உடலுக்கு சக்தி தரும்.
ரோஸ் எசென்ஸ் / ரோஸ்.

வாட்டர்

மன அழுத்தம் குறைக்கும்.
உடல் குளிர்ச்சியை தரும்.
சர்க்கரை இல்லாமல் : நீரிழிவு நோயாளிகளுக்கும் ஏற்றது.
குழந்தைகள், பெண்கள், உடல் எடை குறைக்க விரும்புவோருக்கும் சிறந்த தேர்வு.

– ஹேமலதா வாசுதேவன்

Related Stories: