ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் சாம்பல் நிற அணில்கள் சரணாலயத்தில் மலபார் அணில்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை சாம்பல் நிற அணில்களின் சரணாலயமாக உள்ளது. இந்தப் பகுதியில் அரிய வகையைச் சேர்ந்த சாம்பல் நிற அணில்கள் அதிகமாக உள்ளன. இதனால் இந்த அணில்களை பாதுகாக்கவும், அதனை கண்காணிக்கவும் தமிழக அரசு சாம்பல் நிற அணில்கள் சரணாலயமாக அறிவித்து, செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் சாம்பல் நிற அணில்கள் சரணாலயத்தில் தற்போது மலபார் அணில்களும் கணிசமாக உள்ளன.
இது குறித்து மலைவாழ் மக்கள் சிலர் கூறும்போது சாம்பல் நிற அணில்கள் வசிக்கும் பகுதிகளிலேயே இந்த மலபார் அணில்களும் உள்ளன. ஆரம்பத்தில் அங்கொன்றும் இங்கொன்றும் மலைப்பகுதியில் காட்சியளித்த மலபார் அணியில்கள் தற்போது கணிசமாக செண்பகத் தோப்பு பகுதி உள்ளிட்ட வனப்பகுதியில் காணப்படுகிறது. செண்பத்தோப்பு வனப்பகுதிகளுக்கு செல்பவர்களுக்கு விருந்தாக சாம்பார் நிற அணில்களும் மலபார் அணில்களும் மரங்களில் தாவி சாவி செல்வது கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது என்றனர்.
The post ஸ்ரீவில்லி. அணில்கள் சரணாலயத்தில் மலபார் அணில்கள் எண்ணிக்கை உயர்வு appeared first on Dinakaran.
