வேலூர், மார்ச் 6: வேலூர் எஸ்பி தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் உட்பட 4 பேரை பணியிட மாற்றம் செய்து வேலூர் சரக டிஐஜி உத்தரவிட்டுள்ளார். வேலூர் எஸ்பி தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், வேலூர் மாவட்ட சைபர் கிரைம் இன்ஸ்பெக்டராகவும், அங்கு பணியாற்றிய ரஜினிகுமார், வேலூர் மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராகவும், அங்கு பணியாற்றிய ராஜசுலோச்சனா, சத்துவாச்சாரி இன்ஸ்பெக்டராகவும், அங்கு பணியாற்றிய லதா, வேலூர் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டராக பணியிட மாற்றம் செய்து, வேலூர் சரக டிஐஜி தேவராணி நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
The post வேலூர் எஸ்பி இன்ஸ்பெக்டர் உட்பட 4 பேர் பணியிட மாற்றம் டிஐஜி உத்தரவு appeared first on Dinakaran.