கடம்பூரில் விவசாயிகளுக்கு பண்ணை இயந்திரமயமாக்கல் பயிற்சி

கோவில்பட்டி, மார்ச் 6: அட்மா மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் வேளாண்மை பொறியியல் துறை மூலம் கடம்பூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூட அரங்கில் மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கு பண்ணை இயந்திரமயமாக்கல் பயிற்சி நடைபெற்றது. துணை வேளாண்மை அலுவலர் முத்துக்குமார் காளிராஜ் பங்கேற்று வேளாண் அடுக்ககம் திட்டத்தில் விவசாயிகள் தங்களது நில ஆவணங்களைப் பதிவு செய்து அடையாள அட்டை பெறுவது மற்றும் பிரதம மந்திரி கிசான் திட்டம் குறித்தும், வேளாண்மை பொறியியல் துறை உதவி பொறியாளர் ரமேஷ் துறை சார்ந்த திட்டங்கள் குறித்தும் பேசினர். ஸ்காட் வேளாண்மை அறிவியல் மையத்தை சார்ந்த முருகன் வேளாண்மையில் பண்ணை இயந்திரங்களின் முக்கியத்துவம் குறித்தும், கடம்பூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் வெள்ளைச்சாமி மற்றும் ஜெகநாதன் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தினால் விவசாயிகளுக்கு பயன்கள் மற்றும் பொருளீட்டுக் கடன்கள் குறித்தும் பயிற்சி அளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை அட்மா வட்டார தொழில்நுட்ப மேலாளர் சாலமோன் நவராஜ் பொற்செல்வன், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ரத்தினம்பால், ஜெயலெட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.

The post கடம்பூரில் விவசாயிகளுக்கு பண்ணை இயந்திரமயமாக்கல் பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: