தர்மபுரி அருகே வீடு புகுந்து பள்ளி மாணவியை பலாத்கார முயற்சி: தவெக நிர்வாகி போக்சோவில் கைது

தர்மபுரி: தர்மபுரி அருகே, தனியாக இருந்த 11ம் வகுப்பு மாணவியை, வீடு புகுந்து பலாத்காரம் செய்ய முயன்ற தவெக நிர்வாகி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.  தர்மபுரி மாவட்டம், கடத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர் (45). தவெக நிர்வாகியான இவர், அதே பகுதியைச் சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். கடந்த 23ம் தேதி அதிகாலை வீடு புகுந்து, தனியாக தூங்கிக் கொண்டிருந்த மாணவியை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

இதனால், திடுக்கிட்டு விழித்த சிறுமி, வெளியில் சென்றிருந்த தனது பெற்றோரை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். மேலும், 1098 சைல்டு லைனில் புகார் தெரிவித்தார். இதன்பேரில், சைல்டு லைன் அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினர். இதில், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதுகுறித்த புகாரின் பேரில், அரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று சுதாகரை கைது செய்தனர்.

The post தர்மபுரி அருகே வீடு புகுந்து பள்ளி மாணவியை பலாத்கார முயற்சி: தவெக நிர்வாகி போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Related Stories: