கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே வேப்பனஹல்லி பகுதியில் அனுமதியின்றி நடந்த எருது விடும் விழாவில் காளை முட்டி முதியவர் உயிரிழந்தார். சீறிப்பாய்ந்து வந்த காளை முட்டியதில் அதே ஊரைச் சேர்ந்த இருசன் (65) என்பவர் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.