திருப்பூர், மார்ச் 1: திருப்பூர் வடக்கு மாநகர பொறுப்பாளர் தங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கழக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் 72வது பிறந்தநாள் விழா இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது. இதனையொட்டி திருப்பூர் வடக்கு மாநகரத்துக்குட்பட்ட 29 வட்ட கழகத்தில் கழக கொடி ஏற்றியும் இனிப்புகள் வழங்கியும் நிர்வாகிகள் கொண்டாட வேண்டும்.
மேலும், ஏழை எளியோர்கள் பயன்பெறும் வகையில் மரக்கன்று நட்டும், பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள், ஆதரவற்றோர்களுக்கு உணவுகள் அளித்தும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். எனவே திருப்பூர் ஒருங்கிணைந்த வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட மாநகர, ஒன்றிய, நகர பகுதி, பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர்களும், துணை அமைப்பாளர்களும் கழக நிர்வாகிகளுடன் இணைந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி, மாநகர, மாவட்ட இளைஞரணி சார்பிலும் சிறப்பாக கொண்டாடிட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டது.
The post முதல்வர் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும்: மாநகர பொறுப்பாளர் தங்கராஜ் அறிக்கை appeared first on Dinakaran.
