திருச்சி, பிப்.26: புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில் தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க முயற்சிக்கும், ஒன்றிய பாஜ அரசை கண்டித்து திமுக மாணவரணி சார்பில் திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமை வகித்தார். மாநில மாணவரணி துணை அமைப்பாளர் ஆனந்த் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், மும்மொழி கொள்கை என்ற பெயரில் தமிழ்நாட்டில் இந்தி மொழியை திணிக்கும் முயற்சியை ஒன்றிய பாஜ அரசு நிறுத்த வேண்டும்.
தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ₹2 ஆயிரத்து 152 கோடி கல்வி நிதியை உடன் வழங்க வேண்டும். 40 லட்சம் மாணவர்களின் கல்வியை பாதிக்கும் வகையிலான போக்கை ஒன்றிய அரசு உடன் கைவிட வேண்டும். யூஜிசி நியமன அறிக்கையை திரும்ப பெற வேண்டும். தமிழ்நாட்டில் மீண்டும் ஓர் மொழிப்போரட்டம் ஏற்படாமல் இருப்பதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும். இருமொழி கொள்கையே தமிழ்நாட்டுக்கு போதுமானது, மும்மொழிக்கொள்கை தேவையில்லை. தமிழ்நாட்டில் ஒரு போதும் மும்மொழிக்கொள்கையை அனுமதிக்க மாட்டோம் என வலியுறுத்தப்பட்டது.
The post திருச்சி மத்திய மாவட்ட திமுக ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.
