பெரணமல்லூர், பிப். 26: பெரணமல்லூர் பேரூராட்சி மன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் வேணிஏழுமலை தலைமை தாங்கினார். பேரூராட்சி துணைத் தலைவர் ஆண்டாள் அண்ணாதுரை முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் மகேந்திரன் வரவேற்றார். இதனைதொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் பேரூராட்சி கவுன்சிலர்கள் தங்கள் வார்டு பகுதிகளில் செயல்படுத்த வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து விவாதத்தினர். குறிப்பாக வடுவன் குடிசைப் பகுதியில் புதிய நெற்களம், தென்னான்டை தெருவில் கழிவுநீர் கால்வாய், வடக்கு பகுதியில் நியாய விலை கடை அருகே நாடக மேடை அமைத்தல், ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் கூடுதல் கட்டிடம் கட்டுதல், வண்ணார தெரு, கம்மாள தெரு, சுடுகாட்டு சாலை காலனி தெரு, மருத்துவமனை சாலை உள்ளிட்ட இடங்களில் சிமெண்ட் சாலை அமைத்தல் என வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு வரி சீராய்வு குறித்தும் விவாதம் நடத்தப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் வார்டு கவுன்சிலர்கள், அலுவலக ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post வளர்ச்சி பணிகள் நிறைவேற்ற தீர்மானம் appeared first on Dinakaran.
