பொன்னேரி, பிப்.23: திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், இந்தியை திணிக்க முயற்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து மீஞ்சூர் பெட்ரோல் பங்க் அருகே பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வல்லூர் எம்எஸ்கே.ரமேஷ் ராஜ் தலைமை தாங்கினார். இதில் அவைத்தலைவர் மு.பகலவன், கே.ஜி. பாஸ்கர் சுந்தரம், அன்புவாணன், கதிரவன், சுப்பிரமணி, டாக்டர் பரிமளம், ரவிக்குமார், ஜெகதீசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மீஞ்சூர் பெட்ரோல் பங்கில் இருந்து பஜார் முழுவதும் பதாகைகளுடன் சென்று பாஜ அரசை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது. இதேபோல், பொன்னேரி அண்ணா சிலை அருகிலும் பாஜ அரசை கண்டித்து பேரணி நடந்தது. இதில், பொன்னேரி மீஞ்சூர் திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு வடக்கு ஒன்றிய திமுக மற்றும் பள்ளிப்பட்டு பேரூர் திமுக சார்பில் பள்ளிப்பட்டில் நேற்று பொதுமக்கள், வியாபாரிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பள்ளிப்பட்டு வடக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் சி.ஜெ.சீனிவாசன் தலைமையில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
இதில், பேரூர் திமுக பொறுப்பாளர் வழக்கறிஞர் செந்தில் குமார், பேரூர் துணைச் செயலாளர், பேரூராட்சி விஜியாலு, மாவட்ட பிரதிநிதி குணசேகர், வார்டு கிளை செயலாளர்கள் சிரஞ்சீவி, முரளி, மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் மனோகரன், ரவி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கலீல், பேரூர் இளைஞரணி அமைப்பாளர் சதீஷ் (எ) ஜெகதீஷ், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சந்திரபாபு, ராமன் (எ) பாண்டி, பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர்கள் திருமால், மயில்வாசன், சூரிய, கிளை செயலாளர்கள் எம்.பி.ரவி, சரவணன், தண்டபாணி, .பாஸ்கர், வெங்கடேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
The post ஒன்றிய அரசை கண்டித்து மீஞ்சூரில் திமுக துண்டு பிரசுரம் appeared first on Dinakaran.
