பாரில் ஏற்பட்ட தகராறில் சகோதரனை தாக்கியதாக கூறி கடை உரிமையாளரை கத்தியால் தாக்கிய வடமாநில வாலிபர் கைது

 

திருப்பூர், பிப்.22: திருப்பூர் காங்கயம் ரோடு ஐ.எஸ்.கார்டன் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ் (45). இவர் மணியகாரம்பாளையத்தில் பழைய பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இந்நிலையில், நண்பருக்கு பணம் கொடுக்க ராஜேஸ் நேற்று முன்தினம் நல்லூரில் உள்ள பாருக்கு சென்றுள்ளார். அப்போது பாரில் ராஜேசுக்கு தெரிந்த வடமாநில இளைஞர்கள் சண்டையிட்டு கொண்டிருந்தனர். அந்த சண்டையை தடுத்து நிறுத்திய ராஜேஸ் வடமாநில வாலிபர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு மீண்டும் அவருடைய கடைக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் சிறிது நேரம் கழித்து பாரில் சண்டையிட்டு கொண்டிருந்த வடமாநில வாலிபரின் சகோதரர் முகமது நூர் அக்ரம் (33) அவருடைய நண்பரான அச்சன் ஆகியோர் ராஜேசிடம் எனது சகோதரனை ஏன் தாக்கினாய் எனக்கூறி தகராறு செய்து கத்தியால் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த ராஜேஸ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இது குறித்த புகாரின் பேரில் நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது நூர் அக்ரமை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அச்சனை தேடி வருகின்றனர்.

The post பாரில் ஏற்பட்ட தகராறில் சகோதரனை தாக்கியதாக கூறி கடை உரிமையாளரை கத்தியால் தாக்கிய வடமாநில வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: