அகமதாபாத் நகரில் நடந்த மற்றொரு அரையிறுதியில் கேரளா- குஜராத் அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் கேரளா 457 ரன்கள் விளாசியது. 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் குஜராத் முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 429 ரன் எடுத்திருந்தது. கடைசி நாளான நேற்று குஜராத் முதல் இன்னிங்சை தொடர்ந்தது. 177.4 ஓவர் முடிவில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 455 ரன் எடுத்தது. பின், 2வது இன்னிங்சை ஆடிய கேரளா 4 விக்கெட் இழப்புக்கு 114 ரன் எடுத்தபோது ஆட்டம் முடிவுக்கு வந்தது. அதையடுத்து, முதல் இன்னிங்சில் 2 ரன் கூடுதலாக எடுத்திருந்த கேரளா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதனால், அந்த அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
வரும் 26ம் தேதி மும்பையில் நடக்கும் இறுதிப் போட்டியில் கேரளா, விதர்பா அணிகள் மோதவுள்ளன.
The post ரஞ்சி கோப்பை இறுதிக்கு தகுதி விட்டுத்தராத விதர்பா வீறுகொண்ட கேரளா: 26ம் தேதி மும்பையில் கதகளி appeared first on Dinakaran.
