அதில், கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியை சேர்ந்த கலையரசன் (21) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் பிடித்து வந்து, காவல் நிலையத்தில் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அவர் போலீசாரிடம் நண்பர் அபிஷேக் (20) என்னுடன் இருந்தார். அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது கிருஷ்ணகிரியை சேர்ந்த சுரேஷ்(22), நாராயணன் (21) என ஒப்புக்கொண்டார். இதையடுத்து கலையரசன் மற்றும் அபிஷேக் ஆகிய 2 பேரையும் நேற்று முன்தினம் இரவு கைது செய்த போலீசார், சுரேஷ் மற்றும் நாராயணன் எங்கு இருக்கிறார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தினர். அவர்கள் கொடுத்த தகவலின்படி, நேற்று காலை பொன்மலை குட்டை பெருமாள் கோயில் பின்புறம் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பிரபு, எஸ்ஐ. பிரபாகர், ஏட்டு குமார், போலீஸ் விஜயகுமார் உள்ளிட்டோர் அங்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை கண்ட சுரேஷ், நாராயணன் ஆகியோர் தாங்கள் வைத்திருந்த கத்தியால் போலீசார் பிரபாகர், குமார் ஆகியோரை தாக்கி விட்டு தப்பியோடினர். உடனே போலீசார் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு, சரணடையுமாறு எச்சரித்தனர். ஆனால் சுரேசும், நாராயணனும் தப்பி ஓடினர். இதையடுத்து போலீசார் துப்பாக்கியால் சுட்டதில், சுரேஷ் வலது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்தான். நாராயணன் கீழே விழுந்ததில் வலது காலில் முறிவு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எஸ்பி தங்கதுரை, ஏடிஎஸ்பி சங்கர், டிஎஸ்பி முரளி ஆகியோர் விசாரணை நடத்தினர். மேலும் காயம் அடைந்த போலீசார் குமார், விஜயகுமார் ஆகியோரை சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதே போல் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட சுரேஷ், கால் முறிந்த நாராயணன் ஆகியோரையும் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். துப்பாக்கி சூடு நடந்த இடத்தை எஸ்பி தங்கதுரை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அதே போல தடயவியல் நிபுணர்களும் சென்று விசாரணை நடத்தினர்.
The post நகை, பணத்தை பறித்து ஆண் நண்பரை மிரட்டி… 30 வயது பெண் கூட்டு பலாத்காரம் குற்றவாளியை சுட்டுபிடித்த போலீஸ்: கிருஷ்ணகிரியில் பரபரப்பு appeared first on Dinakaran.
