காங்கயம், பிப்.21: காங்கயம் பகுதியைச் சேர்ந்தவர் சிலம்பரசன் (24). கூலித் தொழிலாளி அப்பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். தற்போது அந்த சிறுமியின் மருத்துவ பரிசோதனையில் கர்ப்பம் தரித்தாக தெரிகிறது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து காங்கயம் போலீசார், சிலம்பரசன் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
The post சிறுமியை திருமணம் செய்த தொழிலாளி மீது வழக்கு appeared first on Dinakaran.
