குடும்பத்தினரை துன்புறுத்தியதால் போலீஸ்காரர் வீட்டின் மீது கையெறி குண்டு வீச்சு

குர்தாஸ்பூர்: குர்தாஸ்பூரில் போலீஸ்காரர் வீட்டின் மீது கையெறி குண்டு வீசிய விவகாரத்தில், பாபர் கல்சா இன்டர்நேஷனல் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் அடுத்த ராய்மல் கிராமத்தில் தேரா பாபா நாயக் என்ற போலீஸ்காரர் வசித்து வருகிறார். அவரது வீட்டிற்கு வெளியே குண்டுவெடிப்பு நடந்தது. அதிர்ஷ்டவசமாக எவருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை. ஆனால் வீட்டின் ஜன்னல் கண்ணாடி உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தது.

குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து மாநில போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், ‘பப்பர் கல்சா இன்டர்நேஷனல்’ என்ற அமைப்பை சேர்ந்த பிரிவினைவாதி ஹேப்பி பசியான் என்பவர் வெளியிட்ட பதிவில், ‘ரைமால் கிராமத்தில் ஜதிந்தர் காவல்துறையில் போலீஸ்காரராக பணியாற்றும் தேரா பாபா நாயக் வீட்டில் கையெறி வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு நானும், எங்களது அமைப்பும் பொறுப்பேற்கிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, போலீஸ்காரர் தேரா பாபா நாயக்கும், அவருடன் சேர்ந்த சில போலீஸ்காரர்களும் எனது வீட்டிற்குச் சென்றனர். அவர்கள் எனது குடும்பத்தினருடன் தவறாக நடந்து கொண்டார். வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்களை பறிமுதல் செய்தனர். இதுபோன்ற செயல்களை செய்ததில் போலீஸ்காரர் தேரா பாபா நாயக் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

அதனால் அவரது வீட்டில் கையெறி குண்டு வீசினோம். இது மற்ற போலீஸ்காரருக்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பாடமாக இருக்கும். போலி என்கவுண்டர்களை மேற்கொள்வதற்கும் சட்டவிரோதமாக குடும்ப உறுப்பினர்களை துன்புறுத்துவதற்கும் போலீசாருக்கு எதிராக கடுமையான பதிலடி கொடுக்கப்படும். அவர்கள் தான் எங்களது இலக்காக இருப்பார்கள். வாகேகுரு ஜி கா கல்சா, வாகேகுரு ஜி கி ஃபதேஹ்’ என்று பதிவிட்டுள்ளார். குர்தாஸ்பூரில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பாபர் கல்சா இன்டர்நேஷனல் பிரிவினைவாதி ஹேப்பி பாசியன் மற்றும் அவரது கூட்டாளி ஷெரா மான் ஆகியோர் பொறுப்பேற்றுள்ளதாக பஞ்சாப் போலீஸ் அதிகாரிகள் கூறினர்.

The post குடும்பத்தினரை துன்புறுத்தியதால் போலீஸ்காரர் வீட்டின் மீது கையெறி குண்டு வீச்சு appeared first on Dinakaran.

Related Stories: