வழக்கம் போல் கடந்த 15ம் தேதி மாலை பணி முடிந்து, எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மின்சார ரயில் மூலம் தனது வீட்டிற்கு புறப்பட்டார். பின்னர், பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் இறங்கி, நடைமேடையில் நடந்து சென்றபோது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி, மர்ம நபர் ஒருவர், திடீரென பெண் காவலர் பரணியின் கழுத்தில் இடந்த ஒன்றரை சவரன் செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார்.
அப்போது நடைமேடையில் இருந்த பொதுமக்கள், அந்த நபரை துரத்தி பிடித்து சரமாரியாக தாக்கினர். பிறகு பெண் காவலர் பரணி சம்பவம் மாம்பலம் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், ரயில்வே போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் இருந்து வழிப்பறி கொள்ளையனை பிடித்து விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவத்தை அடுத்து சென்னையில் அனைத்து மின்சார ரயில்களிலும் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் அரசு இருப்புப்பாதை ரயில்வே போலீசார் இரவு 10 மணி முதல் 12 மணி வரை ரயில் நிலையத்தில் பணிபுரியும் நபர்களுக்கு கூடுதலாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் மட்டும் பயணம் செய்யும் பெட்டிகளில் அதிகப்படுத்தியும், மின்சார ரயில் நிலையங்களில் பிளாட்பாரங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.
The post பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலரிடம் செயின் பறிப்பு சம்பவம் எதிரொலியாக மின்சார ரயில்களிள் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு appeared first on Dinakaran.