பானாஜி: வடமேற்கு அயர்லாந்தில் உள்ள டோனகலைச் சேர்ந்தவர் டேனியல் மெக்லாஹின் (28). இவர் கடந்த 2017ல் கோவா வந்த அவர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இது தொடர்பாக கோவாவைச் சேர்ந்த விகத் பகத் (31) என்பவர்கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் விகத் பகத்திற்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட அமர்வு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.