மேலதிகாரிகள் மீது பாலியல் புகார் கொடுத்தால் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை அதிகரிப்பு : தமிழக அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு!!

சென்னை : அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை விவகாரத்தில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. பாலியல் புகாரில் டிஐஜி தற்காலிக பணி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைக்கும் ஐகோர்ட் பாராட்டு தெரிவித்தது. பணியிடங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் துன்புறுத்தல்களை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு பல்வேறு பரிந்துரைகளை உயர்நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா வழங்கி இருந்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை இயக்குனர் சார்பில் ஆஜரான அரசு குற்றவியல் தலைமை வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, தற்போது பெண்களிடையே நிறைய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் வேலை செய்யும் இடங்களில் மட்டுமின்றி, மற்ற வகைகளிலும் பெண்கள் தங்களுக்கு ஏற்படுகின்ற பாலியல் புகார்களுக்கு தைரியமாக புகார் கொடுக்க முன் வருகிறார்கள் என்றும் கூறினார்.மேலும் காவல்துறையினரும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டார்.

அப்போது பேசிய நீதிபதி மஞ்சுளா, “அண்ணா பல்கலைகழகம் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது. மற்றொரு வழக்கில் டி.ஐ.ஜி. அந்தஸ்தில் இருக்கக்கூடிய அதிகாரி என பாராமல் அவரை தற்காலிக பணி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்த தமிழக அரசின் செயல்பாடு பாராட்டுக்குரியது.மேலதிகாரிகள் மீது பாலியல் புகார் கொடுத்தால் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது. பெண்கள் அச்சமின்றி தைரியமாக வேலைக்குச் செல்லும் நிலையை உருவாக்க வேண்டும். வேலை செய்யும் இடங்களில் உள்புகார் குழு விவரங்களை
இணையத்தில் பதிவேற்ற வேண்டும். POSH சட்டத்தின் அடிப்படையில் விதிகள் குறித்த
அறிக்கையும் தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிடுகிறது, “இவ்வாறு தெரிவித்தார்.

The post மேலதிகாரிகள் மீது பாலியல் புகார் கொடுத்தால் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை அதிகரிப்பு : தமிழக அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு!! appeared first on Dinakaran.

Related Stories: