நெல்லை, பிப்.17: நெல்லை டக்கரம்மாள்புரம் நான்கு வழிச்சாலையில் பால் டேங்கர் லாரி மீது பின்னால் வந்த சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சரக்கு வாகன டிரைவர் படுகாயமடைந்தார்.
நெல்லை – நாகர்கோவில் நான்கு வழிச்சாலையில் டக்கரம்மாள்புரம் ஆயன்குளம் விலக்கு பகுதியில் நேற்று அதிகாலையில் பால் டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. இதனைதொடர்ந்து பின்னால் சரக்கு வாகனம் வந்துள்ளது. அப்போது திடீரென சரக்கு வாகனம், டேங்கர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சரக்கு வாகன டிரைவர் திசையன்விளையைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (22) விபத்தில் சிக்கினார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பாளை தீயணைப்பு நிலைய வீரர்கள் விபத்தில் சிக்கிய சந்தோஷ்குமாரை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
The post வாகனம் மோதி விபத்து appeared first on Dinakaran.
