தேனி மாவட்ட கலெக்டராக ரஞ்சித் சிங் பொறுப்பேற்பு

 

தேனி, பிப். 14: தேனி மாவட்டத்தின் 19வது கலெக்டராக ரஞ்சித் சிங் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். தேனி மாவட்ட கலெக்டராக இருந்த ஷஜீவனா தமிழ்நாடு அரசின் சிறப்பு செயலாக்க திட்ட கூடுதல் செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து தேனி மாவட்ட கலெக்டராக ரஞ்சித் சிங் நியமிக்கப்பட்டார். புதிய மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்ட ரஞ்சித் சிங் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் இதற்கு முன்பு சேலம் மாநகராட்சி ஆணையராக பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தேனி மாவட்டத்தில் புதிய கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்ட ரஞ்சித் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், அரசு திட்டங்களுக்கும் பயனாளிகளுக்கும் இடையே உள்ள இடைவெளியை சரி செய்து நலத்திட்டங்கள் கிடைக்க செய்வது எனது முதல் பணியாக இருக்கும் தேனி மாவட்டத்தில் வனப்பகுதிகள் மற்றும் மாநிலங்களுக்கு இடையே உள்ள பிரச்சனைகள் இருப்பது குறித்து அறிந்தேன் அதனை சரி செய்ய நடவடிக்கை எடுப்பேன்.

இதற்கு முன்பு நாகப்பட்டினம் கூடுதல் ஆட்சியராக பணிபுரிந்த அனுபவம் இருப்பதால் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் அனைத்து பகுதிகளிலும் திட்டங்கள் கொண்டு செல்ல முயற்சி செய்வேன் என தெரிவித்தார்.

The post தேனி மாவட்ட கலெக்டராக ரஞ்சித் சிங் பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Related Stories: