சாத்தூர்: விருதுநகர் – சாத்தூர் நான்குவழிச் சாலையின் அருகே உள்ளது இ.குமாரலிங்கபுரம். இங்கு 1,500 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழில் பூங்கா அமைய உள்ளது. இ.குமாரலிங்காபுரம் பாசன கண்மாயில் விவசாய நிலங்களுக்கு கரம்பை மண்ணை எடுத்து செல்வதற்கு சாத்தூர் அருகே வேப்பிலைபட்டியை சேர்ந்த சிவரஞ்சனி வருவாய்த்துறையின் அனுமதி பெற்றுள்ளார்.
ஆனால் பாசனக் கண்மாயில் கரம்பை மண்ணுக்கு பதிலாக சரளை மண் அள்ளியதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அரசு அனுமதியில்லாமல் சரளை மண் எடுக்க பயன்படுத்திய 2 பொக்லைன் இயந்திரம், 4 லாரியை கோட்டாட்சியர் சிவக்குமார் வச்சகாரப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். கனிம வளங்கள் திருடுவதை தடுக்க தவறிய சாத்தூர் தாசில்தார் ராமநாதனை நேற்று சஸ்பெண்ட் செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.
The post கனிமவள திருட்டு தாசில்தார் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.