காவல்துறை தரப்பில், “திருப்பரங்குன்றம் மலையை காரணமாக்கி, மக்களின் ஒற்றுமை குலைத்து விடக்கூடாது. யாத்திரைக்கு மனுதாரர் கேட்கும் வழித்தடம் போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலை ஆகும். யாத்திரைக்கு அனுமதி வழங்கினால்; அது தேவையற்ற விரும்பதகாத பிரச்சனைகளை உருவாக்கும்,”இவ்வாறு தெரிவித்தார். இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், “பேரணி நடத்த கேட்டுள்ள இடம் கூட்ட நெரிசல் மிகுந்தது. திருப்பரங்குன்றம் பிரச்சனைக்கும், இந்த இடத்திற்கும் என்ன தொடர்பு உள்ளது? தேவையில்லாமல் பிரச்சனையை உருவாக்கப் பார்க்கிறீர்கள்,”இவ்வாறு தெரிவித்தார். மேலும் வேறு இடம் தேர்வு செய்து தெரிவிக்க உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை நாளை மறுதினம் ஒத்திவைத்தார்.
The post திருப்பரங்குன்றம் மலைப் பிரச்சனைக்காக சென்னையில் பேரணி நடத்துவது தேவையில்லாத பிரச்னையை உருவாக்கும் : ஐகோர்ட் கருத்து appeared first on Dinakaran.