பெரம்பூர்: அயனாவரம் மதுரை தெருவை சேர்ந்தவர் வினோத்குமார் (32). அம்பத்தூர் எஸ்டேட்டில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த 2 நாட்களுக்கு முன், இரவு டிபன் வாங்குவதற்காக அயனாவரம் ஞானாம்பாள் கார்டன் வழியாக சென்றார். அப்போது தனது நண்பர் பாபுவுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, பாபு அதே பகுதியில் சிறுநீர் கழித்துள்ளார். அவ்வழியே வந்த ஹரிஹரன் (23) என்பவர், ‘ஏன் இங்கு சிறுநீர் கழிக்கிறீர்கள்’’ என்று திட்டியதாக தெரிகிறது. பாபுவுக்கு ஆதரவாக வினோத்குமார் ஹரிஹரனை மிரட்டியுள்ளார்.
ஆத்திரமடைந்த ஹரிஹரன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வினோத்குமார் தலையில் வெட்டியுள்ளார். படுகாயமடைந்த வினோத்குமாரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்படி, அயனாவரம் இன்ஸ்பெக்டர் பரணிநாதன் வழக்குப்பதிவு செய்து ஹரிஹரனை கைது செய்தனர்.
The post பொது இடத்தில் சிறுநீர் கழித்த வாலிபரை வெட்டியவர் கைது appeared first on Dinakaran.
