ஜிம்பாப்வே அணியுடன் டெஸ்ட் அயர்லாந்து அபார வெற்றி

புலவயோ: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 63 ரன் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி அபார வெற்றி பெற்றது. அயர்லாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது. இந்த இரு அணிகள் இடையே ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் புலவயோ நகரில் கடந்த 6ம் தேதி துவங்கியது. முதல் இன்னிங்சில் அயர்லாந்து 260, ஜிம்பாப்வே 267 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சை ஆடிய அயர்லாந்து 298 ரன் குவித்தது. இதையடுத்து 292 ரன் வெற்றி இலக்குடன் ஜிம்பாப்வே அணி நேற்று ஆட்டத்தை தொடர்ந்தது. துவக்கம் முதல் ஜிம்பாப்வே வீரர்கள் சொதப்பலாக ஆடியதால் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. இடையில் வந்த வெஸ்லி மாதெவெரே மட்டும் 84 ரன் எடுத்து ஆறுதல் தந்தார். 86.3 ஓவர் முடிவில் ஜிம்பாப்வே எல்லா விக்கெட்டுகளையும் இழந்து 228 ரன் மட்டுமே எடுத்தது. இதனால், 63 ரன் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி அபார வெற்றி பெற்றது.

The post ஜிம்பாப்வே அணியுடன் டெஸ்ட் அயர்லாந்து அபார வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: