இரும்பு, அலுமினியத்துக்கு 25% இறக்குமதி வரி: டிரம்ப் அடுத்த அதிரடி

வாஷிங்டன்: இறக்குமதியாகும் இரும்பு, அலுமினியத்துக்கு 25% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபரான நாள் முதலே டிரம்ப் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். மெக்சிகோ மற்றும் கனடாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதமும், சீனா பொருள்களுக்கு 10 சதவீதமும் வரி விதிப்பு பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று டிரம்ப் தெரிவித்திருந்தார். இறுதியில் இந்த வரி விதிப்புக்கு ஒரு மாத காலம் தற்காலிக தடை விதித்தார். தற்போது இரும்பு, அலுமினியம் பொருட்கள் மீதான இறக்குமதி வரி விதிப்பு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என டிரம்ப் கூறியுள்ளார். இரும்பு, அலுமினிய இறக்குமதிக்கு தலா 25 சதவீதம் வரை வரி விதிக்கப்படக் கூடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

புளோரிடாவில் இருந்து நியூ ஆர்லியன்ஸுக்கு செல்லும் வழியில் அவர் கூறுகையில்,’அமெரிக்க பொருட்களுக்கு பிற நாடுகள் உயர்ந்த வரியை விதித்தால் அமெரிக்காவும் அதிக இறக்குமதி வரி விதிக்கும். சில நாடுகள் நமது பொருட்களுக்கு 130 சதவீதம் வரி விதிக்கின்றன. அவர்களுக்கு நாம் பதில்வரி விதிக்காவிட்டால் அது நியாயமானதாக இருக்காது அல்லவா?. இறக்குமதி வரிகள், அரசாங்கத்தின் பட்ஜெட் பற்றாக்குறையை ஈடுசெய்ய உதவும் வருவாய் ஆதாரமாக இருக்கும். எனவே அமெரிக்காவுக்குள் வரும் இரும்பு, அலுமினியத்துக்கு தலா 25 சதவீதம் வரி விதிக்கப்படலாம். இது தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும். ஒரு பக்கம் வரி அதிகம், மறு பக்கம் வரி குறைவு என்ற போக்கெல்லாம் வேண்டாம். அவர்கள் வரி விதித்தால்; நாமும் வரி விதிப்போம்’ என்றார்.

The post இரும்பு, அலுமினியத்துக்கு 25% இறக்குமதி வரி: டிரம்ப் அடுத்த அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: