கடந்த சில நாட்களுக்கு முன் வீரசேகரன் நிறுவனத்தின் வரவு செலவு கணக்குகளை சரிபார்த்தார். அப்போது, நிறுவனத்தில் சுமார் ரூ.88 லட்சம் நித்யா மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வேளச்சேரி காவல்நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார். வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்தனர். அதில், நிறுவனத்தின் வங்கி கணக்கிலிருந்து பணத்தை நித்யா தனது வங்கி கணக்கு உறவினர்கள் வங்கி கணக்கிற்கு பரிவர்த்தனை செய்து மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நித்யா (41) கைது செய்யப்பட்டார். பின்னர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post தனியார் நிறுவனத்தில் ரூ.88 லட்சம் மோசடி செய்த பெண் சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.
