கொடைக்கானலுக்கு செல்லும் மக்களே உஷார் பிளாஸ்டிக் பொருளுடன் வரும் வாகனங்களின் உரிமம் ரத்து: கலெக்டர் எச்சரிக்கை

கொடைக்கானல்: கொடைக்கானலுக்கு பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வரும் தனியார் வாகனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என கலெக்டர் சரவணன் எச்சரித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு முறையான அடிப்படை வசதிகள் உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதைத்ெதாடர்ந்து நேற்று கொடைக்கானலில், திண்டுக்கல் கலெக்டர் சரவணன் ஆய்வு செய்தார்.

வட்டக்கானலில் புதிய சுகாதார வளாக பணி, அருவி பகுதியில் சுற்றுலா வாகன நிறுத்துமிட பணியை ஆய்வு செய்து விரைவாக முடிக்க உத்தரவிட்டார். தொடர்ந்து அப்சர்வேட்டரி ரோஜா பூங்கா பகுதி பிரதான சாலை ஓரத்தில் ஒரு ஏக்கர் அரசு நிலத்தில் வாகன நிறுத்துமிடம் அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து, பஸ் ஸ்டாண்டில் நிறுத்தியிருந்த மற்ற வாகனங்களை வெளியே எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் இனி வாகனங்கள் நிறுத்தப்பட்டால் இருசக்கர வாகனங்களுக்கு ரூ.2,000, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கவும், தொடர்ந்து வாகனங்களை நிறுத்தினால் பர்மிட்டை ரத்து செய்யவும் உத்தரவிட்டார். பின்னர் கலெக்டர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ெகாடைக்கானலில் வரும் கோடை சீசனில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகளவில் இருக்கும். முக்கிய பிரச்னையாக வாகன நிறுத்தும் இடங்கள் கூடுதலாக தேவைப்படுகிறது. இதற்காக புதிதாக 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இதில் சுமார் 1,000 வாகனங்கள் இந்த பகுதிகளில் நிறுத்துவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 2 மாதங்களில் இப்பணிகள் முடிவு பெறும். கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வர தடை செய்யப்பட்டுள்ளது. முதன்முறையாக கொண்டு வரும் தனியார் வாகனங்களுக்கு எச்சரிக்கை செய்து அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து இதுபோல் செயல்பட்டால் அந்த வாகனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும். கொடைக்கானல் நகர் மற்றும் சுற்றுலா இடங்களில் சுற்றுலா பயணிகளுக்காக ஆர்ஓ பிளான்ட்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கூறினார்.

The post கொடைக்கானலுக்கு செல்லும் மக்களே உஷார் பிளாஸ்டிக் பொருளுடன் வரும் வாகனங்களின் உரிமம் ரத்து: கலெக்டர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: