சென்னை: சென்னை ICF வடக்கு காலனியில் உள்ள குளத்தில் குளித்த இரு சிறுவர்கள் சேற்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இருவரின் சடலங்களை மீட்டு ICF போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். அயனாவரம் மாநகராட்சி பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கும் சஞ்சய், பிரவீன் ஆகிய இருவரும் பள்ளிக்கு செல்லாமல் குளத்திற்கு குளிக்க சென்றபோது இந்த துயர சம்பவம் ஏற்பட்டுள்ளது.
