தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த சந்துரு (20) என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அதே ஊரைச் சேர்ந்த கிங்ஸ்டன், மகாராஜன் ஆகிய இருவரை கைது செய்தனர். காவல்நிலைய கழிவறையில் வழுக்கி விழுந்து இருவருக்கும் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.