காதலியுடன் பேசிய நண்பனை கொன்று எரித்த வாலிபர் கைது

விருதுநகர்: விருதுநகர் அருகே ஆத்துமேடு பகுதியை சேர்ந்தவர் பொன்ராஜ் விக்னேஷ்(33). இவருக்கு திருமணமாகி, மனைவி 5 ஆண்டுக்கு முன் பிரிந்து சென்றுவிட்டார். இவர் தந்தையுடன் ஓட்டல் நடத்தி வந்தார். இவரது நண்பர் விருதுநகர் 116 காலனி பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி(19). இவர் ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்ணிடம் பொன்ராஜ் விக்னேஷ் செல்போனில் பேசினாராம். இதை கிருஷ்ணசாமி கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்பகை இருந்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணசாமி, நண்பர் அல்லம்பட்டி பகுதியை சேர்ந்த அன்புச்செல்வம் (23) ஆகியோர் இணைந்து பொன்ராஜ் விக்னேஷை அடித்து கொலை செய்தனர். பிறகு அவரது உடலை விருதுநகர் நிறைவாழ்வு நகர் பகுதியில் பாலம் அடியில் உள்ள குப்பைக்குள் வைத்து எரித்துவிட்டனர். தகவல் அறிந்து வந்த விருதுநகர் பஜார் போலீசார், பொன்ராஜ் விக்னேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து கிருஷ்ணசாமியை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அன்புச்செல்வத்தை தேடி வருகின்றனர்.

Related Stories: