ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ் (35) ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்து உள்ளார். 2015ம் ஆண்டு அறிமுகமான ஸ்டோய்னிஸ், 71 ஒருநாள் போட்டிகளில் 1495 ரன்கள் எடுத்து உள்ளார். 48 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். 2017ம் ஆண்டு ஆக்லாந்தில் நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் ஆட்டமிழக்காமல் 146 ரன்கள் எடுத்ததே ஸ்டோய்னிசின் அதிகபட்ச ஸ்கோர். இந்தியாவில் நடந்த 2023 உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணியில் ஸ்டோய்னிஸ் முக்கிய பங்காற்றினார்.
2018-19ம் ஆண்டிற்கான ஆஸ்திரேலியா அணியின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராகவும் தேர்வு செய்யப்பட்டார். ஓய்வு குறித்து ஸ்டோய்னிஸ் கூறுகையில், ‘ இது நம்பமுடியாத பயணம். இது எளிதான முடிவு அல்ல. எனது தொழில் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தில் முழுமையாக கவனம் செலுத்த இதுவே சரியான நேரம் என்று நான் நம்புகிறேன்’ என்றார். மார்க்ஸ் ஸ்டோனிஸ் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்தாலும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என்று கூறி உள்ளார்.
The post ஆஸிக்கு எதிரான 2வது டெஸ்ட் இலங்கை நிதான ஆட்டம் appeared first on Dinakaran.
