அரியலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மதிமுக.வினர் மரியாதை

 

அரியலூர்: அண்ணா 56வது நினைவு நாளை முன்னிட்டு அரியலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள, அவரதுசிலைக்கு, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா, தலைமையில் மதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், மதிமுக மாவட்ட செயலாளர் ராமநாதன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தங்கவேல் ஒன்றிய செயலாளர்கள் சங்கர், கவிஞர் எழிலரசன், பொதுக்குழு உறுப்பினர் கொளஞ்சி, நகர செயலாளர் மனோகரன், தொண்டரணி சசிகுமார், மாவட்ட பிரதிநிதி, சேப்பெருமாள் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஊர்வலமாக வந்து, மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

இதேபோல், அரியலூர் நகர திமுக சார்பில், அக்கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் அருங்கால் சந்திரசேகரன் தலைமையில், நகர திமுக செயலாளர் முருகேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலு ஒன்றிய திமுக செயலாளர்கள் அன்பழகன், அசோக் சக்கரவர்த்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தெய்வ இளையராஜன் உள்ளிட்டோர் முன்னிலையில் நகர அவைத் தலைவர் மாலா தமிழரசன், நகர பொருளாளர் இராஜேந்திரன், திமுக மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் குணா, திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் அருள்ராஜா, திமுக மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் தங்கை எழில்மாறன், மற்றும் ஒன்றிய, நகர, மாவட்ட ,மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இதேபோல் செந்துறையில் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணாவின் சிலைக்கு செந்துறை திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், செந்துறை திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் எழில்மாறன் தலைமையில் திமுக நிர்வாகிகள் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

The post அரியலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மதிமுக.வினர் மரியாதை appeared first on Dinakaran.

Related Stories: