குறிப்பாக ஆப் சைட் செல்லும் பந்தில் அவர் அவுட்டானது பெரும் விமர்சனத்திற்கு ஆளானது. இந்நிலையில் இழந்த பார்மை மீட்பதற்காக விராட் கோலி ரஞ்சி கோப்பை போட்டிக்கு திரும்பியுள்ளார். 13 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளூர் கிரிக்கெட்டில் விராட் கோலி களமிறங்குவதால் இந்த போட்டியை காண காலை முதலே ரசிகர்கள் டெல்லி ஜெட்லி மைதானத்தில் சுமார் 15 ஆயிரம் ரசிகர்கள் குவிந்தனர். இதற்கிடையே ரசிகர்கள் அதிகளவில் குவிந்ததால் கூட்டத்தை கட்டுப்படுத்த டெல்லி போலீசார் தடியடி நடத்தினர். கோஹ்லியின் ஆட்டத்தை காண்பதற்காக அரங்கம் முழுவதும் ரசிகர்கள் நிரம்பி வழியும் வீடியோவும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
The post 13 ஆண்டுக்கு பின் உள்ளூர் போட்டி கோஹ்லியை காண குவிந்த ரசிகர்கள் appeared first on Dinakaran.
